எஸ்.ரங்கநாதன்


சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிப்பரும், சிங்காரச்சென்னை இதழின் ஆசிரியரும், செந்தமிழ்நாடு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான ரங்கநாதன் அவர்கள் வான்பூமி இதழுக்கு பேட்டி அளித்தபோது...


உங்களைப் பற்றி...


நான் குடியிருக்கும் வீட்டிக்கு முன்பே என் அலுவலகம் அமைந்து உள்ளதே நேரத்தையும், வேலையை விரைவாக முடிக்க மிகவும் உதவுகிறது. எனக்கு மிகவும் பிடித்த விஷயம் மற்றவர்கள் நேரத்தை வீணாக்கமாட்டேன். எந்த வேலையாக வந்தோமோ அந்த வேலையை முடித்து விட்டுதான் மற்ற செய்திகளை பற்றி பேசுவார். நுங்கம்பாக்கம் பகுதியில் அவரது பெயரும், சிங்காரச்சென்னை பத்திரிகை அனைவரது மனதிலும் பதிந்து விட்டது.


இதை உணர்த்தும் விதமாக நடந்த சம்பவம் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்கையாக மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றார்.


பத்திரிக்கையாளர்களுக்கு எந்த வகையில் உதவுகிறார்?


பத்திரிக்கை துறையில் பணிபுரிய மிகுந்த துணிச்சல் வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் சிறு பத்திரிக்கை நடத்துபவர்களுக்கு துணிச்சல் மட்டுமல்ல தன்னம்பிக்கையும் அதிகம் வேண்டும். அப்படியோரு மனிதராக தான் ரங்கநாதன் அவர்களை பார்க்கிறோம். பத்திரிக்கை பெயர் வைப்பதில் தொடங்கி ஒவ்வொரு படியாக அனைத்து விஷயங்களையும் செய்து தருகிறார். பத்திரிக்கையில் ஏற்படும் பல்வேறு சந்தேகங்களையும் புரியும்படி சொல்லி விடுவார். ஸிழிமி  மற்றும் நிதீமன்ற அலுவலகத்தில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது உத்தரவுகள் வெளியிட்டால் அதைப்பற்றி பத்திரிக்கையாளர்களுக்கு உடனே தெரிவிப்பார்.


செந்தமிழ்நாடு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராக செய்த பணிகள்?


பல வருடங்களாக பல்வேறு சங்கத்தில் உறுப்பினராக இருந்து நியாயமான முறையில் பலவேறு கேள்விகளை தளபதி அவர்களும், ரங்கநாதன் அவர்களும்  கேட்டு உள்ளனர். அந்த தேடலே செந்தமிழ்நாடு ஊடகவியலாளர்கள் சங்கம் உருவாக காரணம். சங்கத்தை முறையாக பதிவு செய்து வரும் காலங்களில் உறுப்பினராக வரும் பத்திரிக்கையாளர்கள் பயனடைய செய்து உள்ளார்கள். பத்திரிக்கையாளர்கள் பிரச்னைகளை மாதந்திர கூட்டத்தில் பேசி இதற்கான நல்ல முடிவும் எட்டப்பபடுகிறது. சங்கத்தின் உறுப்பினர்களை பெருக்க அனைத்து விதமான செய்திகளையும், வேலைகளையும் பொதுச்செயலாளர் ரங்கநாதன் செய்து வருகிறார். பத்திரிக்கையாளர்களின் பல்வேறு போராட்டங்களையும் கலந்து கொண்டு தன் கருத்தை பதிவு செய்து வருகிறார்.  


ரங்கநாதன் அவர்களைப்பற்றி வான்பூமி  ஆசிரியர் பிரகாஷ்


வான்பூமி பத்திரிக்கை துவங்கும் முன்பே பாஸ்ட் டிராக் கால்டாக்ஸி நிர்வாக இயக்குநர் ரெட்சன் அம்பிகாபதி அவர்கள் நடத்தி வந்த ஓட்டுநர் ஓசை இதழின் துணை ஆசிரியராக பணியாற்றி வந்தேன். அப்பத்திரிக்கையின் ஆலோசகராக ரங்கநாதன் அவர்கள் இருந்தார். அப்போது பழக்கம் ஏற்பட்டது.


       அதன்பின் வான்பூமி பத்திரிக்கை துவங்கிய பிறகு நெருக்கம் ஏற்பட்டது. வான்பூமிக்கு பல்வேறு ஆலோசனைகளை இன்று வரைக்கும் வழங்கி வருகிறார். பெருங்களத்தூர் கையேடு புத்தகம் வெளியிடுங்கள் உங்களுக்கு அப்பகுதியில் நல்ல பெயர் கிடைக்கும் என்றார். அதுவும் நன்றாக நடந்தது. அவர் எந்த ஒரு விஷயத்தை சொல்லி செய்யுங்கள் என்றாலும் அது நன்மையும், நற்பெயரையும் தேடி தரும். பத்திரிக்கை துறையில் அவருக்கு இருக்கும் அனுபவத்தை, அறிவுரைகளையும் நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.