பீர்க்கன்காரணை ஸ்ரீராம் நகர் குடியிருப்போர் பொது நலச்சங்கம் மற்றும் ஸ்ரீராம் நகர் மகளிர் சங்கமும் இணைந்து நடத்திய பொங்கல் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வருங்கால இந்தியா இளைஞர் கையில்தான் உள்ளது என்று சுவாமி விவேகானந்தர் மற்றும் ஜயா அப்துல் கலாம் கூறியதுபோல் நம் தமிழர் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்கும் கடமை அவர்களிடத்தில் தான் உள்ளது.எனவே . இதுபோன்ற தமிழர் விழாக்களில் குடும்பத்துடன் கலந்து கொள்ளுவது வருங்கால இளைய தலைமுறைக்கு நம் கலாச்சாரத்தோடு ஒற்றுமையையும் கற்று தருகிறது.