தோற்றத்தில் கம்பீரம் சிறுவயதிலேயே பல கலைகளை கற்றார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் சினிமா துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். தொடர்ந்து 38 ஆண்டுகளாக மேலாக சினிமா துறையில் ஸ்டன்ட் மாஸ்டராக வளம் வருபவர். நடிகர், நடிகைகள் மற்றும் வெளிநாட்டினர் என்று 3000 பேருக்கு மேல் கலைகளை பயின்று கொண்டிருப்பவர். நாடார் பேரவையில் மாநில தலைவர் பதவியை வகித்தவர். வாழ்க்கையை அனைவரும் பொறுமையாகவும், அமைதியாகவும் வாழ யோகாசன கலையை கற்றுத் தருபவர்.
தங்கத்தின் விலையேற்றத்தைப் பார்த்து அனைவரும் பயந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த தங்கத்தைப் பார்ப்பவர்கள் அனைவரும் இவரை வரவேற்று, பாராட்டி மகிழ்ச்சி அடைகிறார்கள். தன் பெயரிலேயே தங்கத்தை வைத்திருப்பவர். இப்படி பல கலைகளில் வல்லவரானவர் ஸ்டண்ட் மாஸ்டர் ஜக்குவார் தங்கம் அவர்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கோம்ம கோட்டை கிராமத்தில் பால்பாண்டியன், சின்னனம்மாள் தம்பதியினருக்கு 9வது மகனாக பிறந்தார். தனது 20 வயதில் 23 கலைகளை கற்றுக்கொண்டார். 1987ஆம் ஆண்டு படை விரட்டுதல் போட்டியில் கலந்து கொண்டு புரட்சித் தலைவரால் கவரப்பட்டு, அவரது அழைப்பை ஏற்று சென்னை வந்தார். மூன்று மாதங்கள் அவரது வீட்டில் தங்கியிருந்து இவரது சினிமா ஈர்ப்பை பார்த்த புரட்சி தலைவர் ஜக்குவார் தங்கத்தை சினிமா உலகில் அறிமுகப்படுத்தினார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழியில் 987 படங்கள் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றி உள்ளார்.
இதில் 5 படங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது பெற்று உள்ளார். 1984ஆம் ஆண்டு துனைவியராக சாந்தி அவர்களை கரம்பிடித்தார். இவர்களுக்கு இரண்டு புதல்வர்கள் விஜய சஞ்சீவி, ஜக்குவார் ஜெய். எதிர்கால திட்டம்: தனது இரண்டு மகன்களையும் சினிமா துறையில் ஸ்டாராக்க வேண்டும். அதற்காக அவர்களை தயார்ப்படுத்தி வருகிறேன். மூத்த மகனை சூர்யா படம் மூலம் அறிமுகப்படுத்தியள்ளேன். அப்படத்தில் உலகத்தில் யாரும் முயற்சி செய்யாத ஒன்றை செய்து காட்டியுள்ளார் விஜய சஜ்ஜீவி. இரண்டு பனை மரத்தில் நடுவே காலை வைத்து நின்று கொண்டிருப்பார்.
தன்னுடன் பழகிய நடிகர்களை பற்றி ஜக்குவார் தங்கம்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: ப்ளோட் ஸ்டான் ஆங்கில படத்தில் சூப்பர் ஸ்டாரான பணியாற்றியபோது என் தோல்மீது கைபோட்டு பேசுவார். அவர் வாழ்க்கையை பற்றி தத்துவங்கள் நிறைய சொல்வார். பிறருக்கு உதவும் மனம் படைத்தவர். வாழ்க்கையில் எவ்வளவு உயரத்தில் சென்றாலும் பழைய காரியத்தை மறக்காத உள்ளம் படைத்தார்.
கமல்: எப்பொழுதும் அறிவு பூர்வமாக சிந்திக்கக் கூடியவர். அவரதும் படம் ஷுட்டிங் என்றால், அவர் வீட்டில் இருந்துதான் சாப்பாடு வரும். சினிமா உலகை மேன்மேலும் உயர்த்த போராடிக் கொண்டிருப்பவர். சினிமாவில் இவரால் யாரும் கஷ்டப்பட்டதில்லை.
ஜெய்சங்கர்: தான் பிறருக்குக் கொடுத்ததை வெளியே தெரிவிக்கக் கூடாது என்று நினைக்கும் நல்ல கலைஞர். யாருக்காவது வாக்குறுதி ஏதேனும் கொடுத்தால் அதை தவறாமல் நிறைவேற்றுவார். சொன்னால் சொன்னபடி நடந்துகொள்ளும் உத்தம மனிதர்.
விஜயகாந்த்: 1979ஆம் ஆண்டு சிலம்பம் கற்றுக்கொள்ள என்னிடம் வந்தார். ஒருமுறை அவர் வீட்டிற்கு சென்று இருந்தேன். அவரை கான வரும் அனைவருக்கும் உணவு கொடுக்க ஏற்பாடு செய்கிறார். இன்றுவரையிலும் தொடர்ந்து செய்து வருகிறார்.
சரத்குமார்: கோபம் இருக்குமிடத்தில்தான் குணம் இருக்கும் என்பார்கள். யாருக்காவது கஷ்டம் என்றால் அவரே நேரில் சென்று உதவிக்கூடியவர். எல்லோரிடத்திலும் அன்புடன் பழகுவார். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயலாற்றக் கூடியவயர்.
சத்யராஜ்: தன்னுடன் நடிக்கும்போது ஸ்டன்ட் ஊழியர்களுக்கு அடிப்பட்டால் உடனே ஓடிவந்து உதவக் கூடியவர். ஷுட்டிங் முடித்து வீட்டிற்கு திரும்பிய பின் அடிபட்ட நபருக்கு போன் செய்து நலம் விசாரிக்கக் கூடிய நல்ல மனிதர்.
ராஜ்கிரண்: எல்லோரிடத்திலும் அண்ணன், தம்பி போல் பழகக் கூடியவர். தனக்கு நன்கு பழக்கமானவர் என்றால் அவர்களின் திருமண செலவு மொத்தத்தையும் ஏற்று நடத்தக் கூடியவர்.
நெப்போலியன்: அவருக்கு தெரிந்து யாராவது கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தால் தானாக சென்று உதவி செய்பவர். அவர் மந்திரி என்று பார்க்காமல் எல்லோரிடத்திலும் நல்லவிதமாக பழகக் கூடியவர்.
விஜயகுமார்: என் குடும்பத்தில் ஒருத்தர். என் அண்ணன். தங்கமான குணம் மற்றவர்களை ஈர்க்கக் கூடியது. வீட்டிற்கு சென்றால் மஞ்சுளா அம்மா சாப்பாடு செய்து சாப்பிட்ட பிறகு வெளியே விடுவார்கள்.
ராமராஜன்: பணம் கொடுக்கும் வள்ளல். வீட்டில் இருந்து வரும்போது பண கட்டுவுடன் வெளியே வந்து கேட்பவர்களுக்கு உதவி செய்யும் நல்ல உள்ளம் உடையவர். உதவும் உள்ளம் உடையவர்கள் என்றாவது உயர்வான நிலையை அடைவார்கள். எதிர்காலத்தில் அவரும் கண்டிப்பாக நல்ல நிலைக்கு வருவார்.
விஜய்: யாருவுடனும் அதிகம் பேசமாட்டார். மனிதாபிமானம் உடையவர். அவர் தங்கை மிகுந்த பாசம் உடையவர். அவர் இறந்தபின் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முயன்றதை செய்து வருபவர்.
அஜித்: யாருக்காவது உதவி தேவைப்பட்டால் அவர்களுக்கு தெரியாமல் அந்த உதவியை யார் மூலமாகவும் அவர்களுக்கு செய்து விடும் மிகப்பெரிய குணம் உடையவர்.
சூர்யா: தமிழகத்தில் கல்வி பெருக உதவி செய்பவர். அவர் குடும்பமே தமிழ்நாடு வளர மிகுந்த அக்கரை கொண்டுள்ளார்கள்.