ஒற்றுமை பொங்கல் விழா



பாரதி கலை இலக்கியப் பண்பாட்டு நலச்சங்கத்தின் சார்பில் ஒற்றுமை பொங்கல் விழா  தலைவர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் பெளத்தபிரியன் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  விழாவிற்கு இரவிச்சந்திரன், இராகவன், இராமச்சந்திரன், கிருபாகரன், குடந்தை மணிராஜ், இராசேந்திரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் பீர்க்கன்காரணை பேரூராட்சி தலைவர் சம்பத்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஒற்றுமை பொங்கலை மாலதி  சம்பத்குமார் தொடங்கி வைத்தார். பொங்கல் வைத்தவர்களுக்கு  முன்னாள் பீர்க்கன்காரணை பேரூராட்சி துணை தலைவர் சீத்தாராமன் பரிசுகளை வழங்கினார்.  பெண்களை ஒருங்கிணைத்து ஒற்றுமை பொங்கலுக்கு துணை நின்ற மகளிர் குழு தலைவி பவானி. விழா குழுவினர் சின்னக்கண்ணு, பட்டாபி, சங்கர், சுப்ரமணியன், சூரன் குறுமன்ஸ், பொன்தமிழ் அரசு, வேலு, கல்யாண்ராஜ், தரணி, பிச்சைமுத்து, அலெக்ஸ்யுவான். நிகழ்ச்சி அமைப்பு பாபுராவ், விழா முடிவில் பாபு நன்றியுரையாற்றினார்.